Enable Javscript for better performance
பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

    By DIN  |   Published on : 05th July 2018 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு கல்லூரித் தலைவர் ஆர்.குப்புசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டி.சர்வேசன், நிர்வாக அலுவலர் ஏ.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலாம் ஆண்டு துறைத் தலைவர் டி.பாபு வரவேற்றார்.
    வகுப்புகளைத் தொடக்கி வைத்து கல்லூரி முதல்வர் ஆர்.குப்புசாமி பேசுகையில், மாணவ, மாணவிகள் ஒழுக்கம், நேர்மையுடன் கல்வி பயில வேண்டும். இங்குள்ள ஆய்வக வசதிகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
    கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். படிக்கும் காலத்திலேயே கல்வியுடன் தனித் திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். விழாவில், கல்லூரியின் வேதியியல் துறை விரிவுரையாளர் டி.விஜயகுமார் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai