Enable Javscript for better performance
மனைவியைக் கொலை செய்த வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே மனைவியை தீ வைத்துக் கொலை செய்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கரிமலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ் (40). இவரது மனைவி இன்பஜோதி (36). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் கழித்து, இதே பகுதியைச் சேர்ந்த காமாட்சி (26) என்ற பெண்ணுக்கும், ரமேஷுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாம்.
    இதனால் ரமேஷ், இன்பஜோதி ஆகியோருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்த நிலையில், கடந்த 2013 ஏப்ரல் 18-ஆம் தேதி வீட்டில் இருந்த இன்பஜோதியிடம், ரமேஷ் தகராறில் ஈடுபட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், மனைவி இன்பஜோதி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துவிட்டு வீட்டுக் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
    நீண்ட நேரத்துக்குப் பிறகு பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இன்பஜோதி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து மேல்செங்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து
    வந்தனர். இந்த வழக்கு திருவண்ணாமலை கூடுதல் அமர்வு மற்றும் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி எஸ்.நடராஜன், கூலித் தொழிலாளி ரமேஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
    அபராதத் தொகையை கட்டத் தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai