Enable Javscript for better performance
மின்சார புல் நறுக்கும் கருவிகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மின்சார புல் நறுக்கும் கருவிகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 05th July 2018 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 75 சதவீத மானிய விலையில் மின்சார புல் நறுக்கும் கருவிகள் பெற விரும்பும் விவசாயிகள், வரும் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
    திருவண்ணாமலை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், கால்நடை வளர்ப்போர்களுக்கு 75 சதவீத மானியத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மின்சார புல் நறுக்கும் கருவி வழங்கப்படுகிறது. தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ், 2017 - 18ஆம் ஆண்டில் 51 பேருக்கு இந்தக் கருவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    இவர்களில் 30 சதவீதம் பேர் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசின் சரக்கு மற்றும் சேவை வரி நீங்கலாக புல் நறுக்கும் கருவி பெற விரும்பும் பயனாளிகள் குறைந்த பட்சம் 2 மாடுகள், தீவனப் பயிர் சாகுபடி செய்ய 0.5 ஏக்கர் அளவு நிலம் வைத்திருக்க வேண்டும்.
    மின்சார வசதியுடன் கூடிய தீவனப் பயிர் சாகுபடி செய்யக் கூடிய இடமாக இருக்க வேண்டும். இதற்கு முன்பு இது போன்ற திட்டங்களில் பயன்பெறாத விவசாயிகள், மானிய விலையில் புல் நறுக்கும் கருவி பெற அருகே உள்ள கால்நடை மருந்தகங்கள், கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகலாம்.
    தேவையான விண்ணப்பங்களை அங்கேயே பெற்று அதில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டை நகல், செல்லிடப்பேசி எண், தங்கள் பெயரில் உள்ள நிலத்துக்கான சான்று, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கணக்குப்
    புத்தக நகல் ஆகியவற்றோடு விண்ணப்பத்தை வரும்
    10-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai