Enable Javscript for better performance
வசூரில் கடத்தலுக்காக குவிக்கப்பட்டுள்ள செய்யாற்று மணல்- Dinamani

சுடச்சுட

    

    வசூரில் கடத்தலுக்காக குவிக்கப்பட்டுள்ள செய்யாற்று மணல்

    By DIN  |   Published on : 05th July 2018 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போளூரை அடுத்த வசூர் கிராமப் பகுதியில் கடத்தப்படுவதற்காக செய்யாற்று மணல் நெல் களத்திலும், தெருக்களிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
    போளூரை அடுத்த வசூர் கிராமத்தின் அருகே செய்யாறு செல்கிறது. இந்த ஆற்றில் இருந்து இரவு நேரங்களில் மணலை சுத்தப்படுத்தி மாட்டு வண்டிகளில் ஏற்றி வரும் மணல் கொள்ளையர்கள், வசூர் ஊராட்சியில் உள்ள நெல் களத்திலும், தெருக்களிலும் கொட்டி வைக்கின்றனர். பின்னர், அந்தப் பகுதிகளிலிருந்து இரவு நேரங்களில் லாரி, டிராக்டர்களில் மணலை ஏற்றி கடத்திச் செல்கின்றனர்.
    நெல் களத்தில் மணல் கொட்டப்பட்டுள்ளதால் அந்தக் களத்தை பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் மணல் கடத்திச் செல்லப்படுவதால், வாகனங்களிலிருந்து எழுப்பப்படும் அதிக ஒலி காரணமாக பொதுமக்கள் வீடுகளில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
    எனவே, வசூர் பகுதியில்
    வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் பார்வையிட்டு, மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வசூர் பகுதியிலுள்ள செய்யாற்றின் கரையோரமாக பள்ளம் வெட்டி
    ஆற்றுக்குள் வாகனங்கள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai