Enable Javscript for better performance
விஷம் குடித்து ஒருவர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே விஷம் குடித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
    வந்தவாசியை அடுத்த சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (45). இவரது மனைவி விஜியலட்சுமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தமிழ்ச்செல்வன் மதுப் பழக்கத்துக்கு அடிமையானாராம்.
    இந்த நிலையில், கடந்த ஜூன் 30-ஆம் தேதி தமிழ்ச்செல்வன் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். பின்னர், மயங்கிக் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தேசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து, தீவிரச் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்ச்செல்வன் இறந்தார்.
    இதுகுறித்து தேசூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai