Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் மன்றங்கள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து மன்றங்கள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் ந.கருணாமூர்த்தி முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் அ.கேசவன் வரவேற்றார். மாவட்ட தமிழ்ச் சங்கச் செயலரும், எழுத்தாளருமான ந.சண்முகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், நுண்கலை, தொன்மை பாதுகாப்பு, சுற்றுச்சுழல் ஆகியவற்றின் மன்றங்களை தொடக்கி வைத்துப் பேசினார்.
    பட்டிமன்றப் பேச்சாளர் உமாதேவி பலராமன், மன்றங்களின் அவசியம் குறித்துப் பேசினார். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு எழுத்தாளர் ந.சண்முகம் பரிசுகள் வழங்கினார்.
    விழாவில், பள்ளி ஆசிரியர்கள் மு.முத்துமாரி, நா.வரப்பிரசாதம், க.பாரதி, அ.ராமமூர்த்தி, ஆர்.ராஜேஷ், த.மதியழகன்,
    ஏ.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai