Enable Javscript for better performance
அரசு மதுக் கடைக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    அரசு மதுக் கடைக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 06th July 2018 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு அருகே இருங்கல் கிராமத்தில் புதிதாகத் திறக்கப்படவிருந்த அரசு மதுக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தக் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தில் அரசு மதுபானக் கடை ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது.
    இந்த நிலையில், இந்தக் கிராமத்தில் பொதுமக்கள் அதிகளவில் வசித்து வரும் குடியிருப்புப் பகுதியில் செய்யாறு - சேத்துப்பட்டு சாலையில் மேலும் ஒரு புதிய அரசு மதுபானக் கடையை திறக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனராம்.
    இதனிடையே, கடைக்கான விளம்பரப் பலகையை புதன்கிழமை வைத்த அதிகாரிகள், இந்தக் கடையில் மதுப் புட்டிகளை இறக்கி வைத்து வியாழக்கிழமை பிற்பகலில் விற்பனையைத் தொடங்க திட்டமிட்டிருந்தனராம்.
    இதனை அறிந்த இருங்கல் கிராம மக்கள், புதிய அரசு மதுபானக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செய்யாறு - சேத்துப்பட்டு சாலையில் திறக்கவிருந்த கடையின் முன் மறியலில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்த செய்யாறு டிஎஸ்பி குணசேகரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புதிய அரசு மதுபானக் கடை செயல்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் அளித்த வாக்குறுதியை ஏற்று, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் புதிதாக திறக்கப்படவிருந்த அரசு மதுபானக் கடை மூடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai