Enable Javscript for better performance
ஆத்துரை பச்சையம்மன் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக நிறைவு விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆத்துரை பச்சையம்மன் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக நிறைவு விழா

    By DIN  |   Published on : 06th July 2018 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, வியாழக்கிழமை சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
    ஆத்துரை ஊராட்சியில் ஸ்ரீபச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பொதுமக்கள், பச்சையம்மனை குலதெய்வமாக வழிபடுபவர்களால் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு கடந்த 2017 ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
    கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையெட்டி, வியாழக்கிழமை காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், கோயில் எதிரே சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.
    தொடர்ந்து, ஊர் மக்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஆத்துரை, சித்தாத்துரை, பெரணம்பாக்கம், காந்திநகர், தொழிப்பேடு, ஊத்தூரான்புரவடை உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai