Enable Javscript for better performance
செய்யாறு அருகேதமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட சுடுமண் கல் கண்டெடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகேதமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட சுடுமண் கல் கண்டெடுப்பு

    By DIN  |   Published on : 06th July 2018 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த குண்ணத்தூர் கிராமத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட மட்கல் (சுடுமண் கல் துண்டு) கண்டெடுக்கப்பட்டது.
    குண்ணத்தூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவரின் கோழிப்பண்ணைக்கு அருகில் மண் அள்ளுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பள்ளத்துக்கு அருகில் தமிழ் பிராமி (வரி வடிவம்) எழுத்துகள் கொண்ட மட்கல் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. இதனை தொல்லியல் ஆர்வலரும், வரலாற்று ஆசிரியருமான எறும்பூர் கை.செல்வகுமார் கண்டெடுத்தார்.
    இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட சிதைந்த நிலையில் உள்ள இந்த மட்கல் அல்லது மட்கல் பதிமம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். மண் அள்ளுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் சுற்றுச்சுவரில் செங்கற்கள் கட்டுமானங்கள் போன்ற பதிமம் சுற்றிலும் காணப்படுகிறது. தொன்மைக்கால தமிழர்களின் வரலாற்றை மீட்டு உருவாக்கம் செய்வதற்கு உதவ இந்தச் சான்று வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
    மதுரை கீழடியில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையினர் மேற்கெண்ட அகழாய்வுவில் சங்க காலத்து நகரம் புதையுண்டிருப்பது கண்டறியப்பட்டது.
    மாநிலத்தின் பல இடங்களில் தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள், கல் பாறைகள், குகை வாழிடங்கள் காணப்படுகின்றன.
    அந்த வகையில், குண்ணத்தூரில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட சிதைந்த நிலையில் உள்ள மட்கல் அல்லது சுடுமண் கல் துண்டுகள் பதிமம் சங்க காலத்து தமிழர்களின் பண்பாட்டைக் குறிப்பிடுபவையாக இருக்கலாம்.
    மேலும், இந்த தமிழ் பிராமி எழுத்துகள் (வரி வடிவம்) சுமேரிய எழுத்துகள் (கியூனிபார்ம்), சித்திர எழுத்து முறையான சிந்து சமவெளி எழுத்துகளுடன் ஒத்துப்போகின்றன. இவற்றை மேலும் அறிவியல் பூர்வமாகவும், தொடக்க கால தமிழ் சமூகக் கட்டமைப்பின் வரலாற்றுக்காகவும் ஆய்வு மேற்கொண்டால், தொன்மைக்கால தமிழர்களின் வரலாற்றை மீட்டு உருவாக்கம் செய்ய வாய்ப்பாக அமையலாம் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai