Enable Javscript for better performance
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பசுமை வழிச் சாலை அவசியம்: ஏ.சி.சண்முகம் பேட்டி- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தின் வளர்ச்சிக்கு பசுமை வழிச் சாலை அவசியம்: ஏ.சி.சண்முகம் பேட்டி

    By DIN  |   Published on : 06th July 2018 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தின் வளர்ச்சிக்கு சென்னை - சேலம் இடையிலான பசுமை வழிச் சாலை அவசியம் என்றுபுதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் கூறினார்.
    ஆரணிக்கு வியாழக்கிழமை வந்திருந்த ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
    சென்னை - சேலம் இடையிலான பசுமை வழிச் சாலையால் தமிழகம் பெரிய அளவில் வளர்ச்சி அடையும். இந்தச் சாலை அமைந்தவுடன் சாலை அமைந்த பகுதிகளில் பல தொழில் சாலைகள் அமையும். இதனால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து மக்களின் பொருளாதாரம் உயரும்.
    இந்தச் சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அரசு 6 மடங்கு விலை தருகிறது. கையகப்படுத்தப்படும் நிலங்களில் 70 சதவீதம் விலை நிலங்கள் இல்லை. ஆகையால், அரசு தரும் விலையை பொதுமக்கள், விவசாயிகள் பெற்றுக் கொள்கின்றனர். எதிர்க்கட்சியினர் அவதூறுகளை பரப்பி பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, பசுமை வழிச் சாலை அமைய பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
    தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு அரசுப் பேருந்துகளை இயக்க முதல்வர், போக்குவரத்துத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்க வேண்டும். ஏனெனில், ஆரணி பட்டு உற்பத்தி, அரிசி உற்பத்தி உள்ளிட்ட தொழில்களால் அதிகளவுக்கு வருவாய் உள்ள பகுதியாக உள்ளது என்றார் அவர். உடன், கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
    தொடர்ந்து, ஆரணியைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏ.ஏழுமலை, நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் புதிய நீதிக் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகத்துக்கு சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai