Enable Javscript for better performance
திருவண்ணாமலையில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

    By DIN  |   Published on : 06th July 2018 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 6) நடைபெறும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், வேலையில்லாத இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
    திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விரும்பும் அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை கல்வித் தகுதிகள் கொண்ட வேலையில்லாத இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
    இதேபோல, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட இளைஞர்களை தாங்களாகவோ, தங்களது நிறுவன அதிகாரிகளைக் கொண்டோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப் பணி. இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்புப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
    அரசுத் துறைகளுக்கு அவர்களது பெயர் பதிவு மூப்புப் பட்டியலில் பரிந்துரைக்கப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள், தனியார் துறை வேலைக்குச் சென்றால் தங்களது பதிவு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை. இந்த வாய்ப்பை இளைஞர்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai