Enable Javscript for better performance
பசுமை வழிச் சாலைப் பணி: ஆத்துரையில் போலீஸ் குவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சேத்துப்பட்டு வட்டம், ஆத்துரை கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசுமை வழிச் சாலைக்கு நிலம் அளவீடு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
    சேத்துப்பட்டு வட்டம், ஆத்துரை கிராமத்தில் அண்மையில் பசுமை வழிச் சாலைக்கான நிலம் அளவீடு செய்யும் பணியில் வருவாய்த் துறையினர், போலீஸார் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் பகுதி நில உரிமையாளர்கள் மண்ணெண்ணெய் கேனுடன் தற்கொலை மிரட்டல் விடுத்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் நிலங்களை அளவீடு செய்ய முடியாமல் அதிகாரிகள்
    திரும்பிச் சென்றனர்.
    இந்த நிலையில், பசுமை வழிச் சாலை நில அளவீடு பாதுகாப்பு காவல் உதவி ஆய்வாளர் தயாளன் தலைமையில், போளூர் டிஎஸ்பி சின்னராஜ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சுரேஷ்பாபு, ராஜகோபால், நரசிம்மன், சுரேஷ்சண்முகம் உள்பட ஏராளமான போலீஸார் வியாழக்கிமை குவிக்கப்பட்டு ஆத்துரை, பெரணம்பாக்கம், இராந்தம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார்
    10 கி.மீ. தொலைவுக்கு நிலம் அளவீடு செய்யும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai