Enable Javscript for better performance
மாநில மல்யுத்தப் போட்டி: கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    மாநில மல்யுத்தப் போட்டி: கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 06th July 2018 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் வென்ற திருவண்ணாமலை சண்முகா கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரியில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
    மாநில அளவிலான தமிழ்நாடு சீனியர் மல்யுத்தப் போட்டி சேலம் மாவட்டம், மேட்டூரில் அண்மையில் நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு எடைப் பிரிவுகளில் வெற்றி பெற்றனர்.
    பி.காம். 3-ஆம் ஆண்டு மாணவர் ஜி.அஜித்குமார் வெற்றி பெற்று ரூ.3 ஆயிரம் பரிசுத் தொகை வென்றார். இதேபோல, பி.காம்.
    3-ஆம் ஆண்டு மாணவர்கள் ஏ.அருண்குமார் ரூ.8 ஆயிரமும், கே.பாலாஜி ரூ.1,500-ம், எஸ்.பாலமுருகன் ரூ.500-ம், எஸ்.சந்தோஷ்குமார்
    ரூ. ஆயிரமும் மற்றும் சான்றுகளும் பெற்றனர்.
    வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி, செயலர் என்.குமார், பொருளாளர் கே.ராஜேந்திரகுமார், அறக்கட்டளை உறுப்பினர் ஜி.புல்லையா, முதல்வர் கே.ஆனந்தராஜ், கல்விப் புல முதன்மையர் அழ.உடையப்பன், துணை முதல்வர்
    கே.அண்ணாமலை, கணிதவியல் துறைத் தலைவர் ப.முருகன், உடல் கல்வி இயக்குநர் எம்.கோபி, ஆர்.மீரா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai