Enable Javscript for better performance
மாவட்ட மைய நூலகத்தில் இலவச தையல் பயிற்சி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் இலவச தையல் பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு எலைட் சர்க்கிள் ரோட்டரி சங்கத் தலைவர் ம.ராஜன்பாபு தலைமை வகித்தார். துணைத் தலைவர் வடிவேலு, நூலக ஆர்வலர் அ.வாசுதேவன், தையல் பயிற்றுநர் இளங்கோவன், எலைட் சர்க்கிள் பொருளாளர் சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் நிலை நூலகர் பெ. வள்ளி வரவேற்றார்.
    திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு இலவச தையல் பயிற்சியை தொடக்கி வைத்துப் பேசினார்.
    நிகழ்ச்சியில், நல் நூலகர்கள் வெங்கடேசன், சாயிராம், வாசகர்கள், எலைட் சர்க்கிள் உறுப்பினர்கள், வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள, மைய நூலகப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai