Enable Javscript for better performance
வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்: விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.- Dinamani

சுடச்சுட

    

    வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்: விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி

    By DIN  |   Published on : 06th July 2018 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கூறினார்.
    தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், உழவர் தின விவசாயிகள் மாநாடு திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, அண்ணா சிலை எதிரே நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தலைமை வகித்தார்.
    மாநில பொதுச் செயலர் கே.சுந்தரம், மாநில துணைப் பொதுச் செயலர் ஆர்.ராஜாசிதம்பரம், மாநிலப் பொருளாளர் கே.பி.வேலுமணி, வழக்குரைஞர் ஆர்.ரேணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் வி.சிவப்பிரகாசம், அருணை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் கே.ஜெயகாந்தன், அறிஞர் அண்ணா விவசாயிகள் சங்கத் தலைவர் இரா.சிவக்குமார், திராவிட விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி, பொலக்குணம் ஆர்.சுப்பிரமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
    மாநாட்டில் உழவர் தியாகிகளைப் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
    தேசிய விவசாயக் கொள்கையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களில் வட்டியில்லா கடன் வழங்குவதுபோல, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.
    விவசாயிகள் தற்கொலைகளைத் தடுக்க அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை மத்திய அரசு நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 70 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றார் அவர். மாநாட்டில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai