Enable Javscript for better performance
26 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    26 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 06th July 2018 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் 26 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.பாஸ்கரன் தலைமை வகித்தார்.
    மாவட்ட துணைத் தலைவர்கள் ஜி.அண்ணாமலை, சி.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் க.பிரபு வரவேற்றார். மாவட்ட இணைச் செயலர்கள் கே.ஆறுமுகம், ஆர்.முருகன், மிருனாளினி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
    ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சிச் செயலர்களுக்கு பதிவறை எழுத்தர் பதவிக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். கணினி உதவியாளர்கள், முழு சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு காலமுறை ஊதியம், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன
    உள்பட 26 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் செ.முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வெறிச்சோடிய அலுவலகங்கள்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது. இதனால், மாவட்டம் முழுவதும் உள்ள 18 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும் 80 சதவீத ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai