Enable Javscript for better performance
ஆரணி, திருவண்ணாமலையில் இருந்து புதிய பேருந்துகளை தொடக்கிவைத்தார் அமைச்சர்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி, திருவண்ணாமலையில் இருந்து புதிய பேருந்துகளை தொடக்கிவைத்தார் அமைச்சர்

    By DIN  |   Published on : 07th July 2018 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி, திருவண்ணாமலை பகுதிகளிலிருந்து புதிய அரசு சொகுசுப் பேருந்துகளின் இயக்கத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், 515 புதிய பேருந்துகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 3-ஆம் தேதி தொடக்கி வைத்தார். இந்தப் புதிய பேருந்துகளில் திருவண்ணாமலை மண்டலத்துக்கு மொத்தம் 10 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யபட்டன. 
    இவற்றில் ஆரணியிலிருந்து 3 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    இந்த நிலையில், ஆரணி நகராட்சி பேருந்து நிலையத்தில் ஆரணி - சென்னை வழித்தடத்தில் (தடம் எண் 202) 2 புதிய பேருந்துகளும், ஆரணி - திருப்பூர் வழித்தடத்தில் (தடம் எண் 435) ஒரு பேருந்தும் என 3 புதிய பேருந்துகளின் இயக்கத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
    நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், ஆரணி தொகுதி எம்.பி. செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, திருவண்ணாமலை போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் செல்வகுமார், ஆரணி போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் வெங்கடேசன், அரசு வழக்குரைஞர் க.சங்கர், நகர நிர்வாகி பாரிபாபு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராசன்,  நகரச் செயலர் அசோக்குமார், ஒன்றியச் செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், வேலு, அண்ணா தொழில் சங்க நிர்வாகி உதயசங்கர் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலையில்...: திருவண்ணாமலை - சென்னை இடையே 2 புதிய அரசு சொகுசுப் பேருந்துகளின் இயக்கத்தை தொடக்கி வைக்கும் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். ஆரணி தொகுதி எம்.பி. வெ.ஏழுமலை, கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், அதிமுக தெற்கு மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
    விழாவில், அண்ணா தொழில் சங்க மாவட்டச் செயலர் கோவிந்தராஜ், அதிமுக மாவட்டப் பொருளாளர் எம்.எஸ்.நைனாகண்ணு, அரசுப் போக்குவரத்துக் கழக அண்ணா தொழில் சங்கச் செயலர் டி.மனோகரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai