Enable Javscript for better performance
கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி கோரிக்கை விடுத்தது.
    வந்தவாசியில் அந்தக் கட்சி சார்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற உழவர் தியாகிகள் தினம், விவசாயிகள் மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    மாநாட்டுக்கு கட்சியின் மாநிலத் 
    தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் தலைமை வகித்தார். ஏ.ஜெ.ராமகிருஷ்ணன், சின்னராஜூலு, மோகன் வெங்கடேசன், பாலாஜி, கோபால் ரெட்டியார், ரகுபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர் எஸ்.ரமேஷ்குமார் வரவேற்றார்.
    தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மாநாட்டை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், அதிமுக எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் டி.கே.பி.மணி, விவசாயிகள் கூட்டு இயக்கத் தலைவர் பி.தெய்வசிகாமணி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி மாநில பொதுச் செயலர் பி.என்.இராஜகோபால், மாநில துணைத் தலைவர் என்.பி.வெங்கடகிருஷ்ணன், மாவட்டச் செயலர் ஜெயபால், நிதி காப்பாளர் கே.ஹரிகரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
    கூட்டத்தில், சென்னை, கோவை, கோவில்பட்டியில் உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு சிலையை தமிழக அரசு நிறுவ வேண்டும். கோரையாறு தடுப்பணைத் திட்டம், நந்தன் கால்வாய் திட்டம், சாத்தனூர் மேல்புற கால்வாய் திட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். காவிரி உபரி நீரை வெள்ளாற்றில் இணைக்க வேண்டும். விவசாயிகள், அதிகாரிகள் அடங்கிய வேளாண் உயர்நிலைக் குழுவை தமிழக அரசு மீண்டும் அமைக்க வேண்டும்.
    தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நெல்லுக்கு அறிவித்துள்ள விலை விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 
    தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியச் செயலர் ஜானகிராமன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai