Enable Javscript for better performance
களம்பூரில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    போளூரை அடுத்த களம்பூர் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    களம்பூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாபாரதச் சொற்பொழிவு நடைபெறும். நிகழாண்டு இந்தக் கோயிலில் கடந்த ஜூன் 10-ஆம் தேதி மகாபாரதச் சொற்பொழிவு தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் மகாபாரதச் சொற்பொழிவும், நாடகமும் நடைபெற்றன.
    இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றன. விழாவில் களம்பூர், அய்யம்பேட்டை, கஸ்தம்பாடி, முக்குரும்பை, ஏந்துவாம்பாடி, சந்தவாசல், ஏரிக்குப்பம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை களம்பூர் பொதுமக்கள், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai