Enable Javscript for better performance
காணமல்போன தொழிலாளி சடலமாக மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    தண்டராம்பட்டு அருகே காணாமல்போன மூட்டை தூக்கும் தொழிலாளி, கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
    தண்டராம்பட்டு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி முருகன் (38). இவரது மனைவி கவிதா (35). இந்தத் தம்பதிக்கு சக்தி, சதீஷ் என்ற 2 மகன்களும், திரிஷா, சாரதி என்ற 2 மகள்களும் உள்ளனர்.
    வியாழக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் முருகன் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்து, தண்டராம்பட்டு காவல் நிலையம், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
    இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் வந்து சடலத்தை மீட்டனர். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai