Enable Javscript for better performance
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், செம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் செம்பூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    ஊர்வலத்துக்கு வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் திருமூர்த்தி தலைமை வகித்தார். மருத்துவர் சங்கீதபிரியா, பள்ளித் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பி.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம், கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. வட்டாரச் சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் ஆனந்தி, சுந்தர், சேகர், அசோகன், சக்திவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    மேலும், அந்தக் கிராமத்தில் ஒட்டுமொத்த தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, மாணவர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai