Enable Javscript for better performance
தேனீக்கள் கொட்டியதில் பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழந்தார்.
    வந்தவாசியை அடுத்த தென்கல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணி மனைவி மஞ்சுளா(35). இவர், கடந்த புதன்கிழமை அந்தக் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் விறகு வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு தேன் கூட்டில் இருந்த தேனீக்கள் திடீரென பறந்து வந்து மஞ்சுளாவை விரட்டி விரட்டிக் கொட்டின. இதில் பலத்த காயமடைந்த மஞ்சுளா, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவர் வியாழக்கிழமை இறந்தார். இதுகுறித்து அவரது கணவர் மணி அளித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸார்  வழக்குப் பதிந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai