Enable Javscript for better performance
பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு: அரசாணை நகல் எரிப்பு:  85 விவசாயிகள் கைது- Dinamani

சுடச்சுட

    

    பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு: அரசாணை நகல் எரிப்பு:  85 விவசாயிகள் கைது

    By DIN  |   Published on : 07th July 2018 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் பசுமை வழிச் சாலைக்கான அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 85 விவசாயிகளை போலீஸார்  கைது செய்தனர்.
    சேலம் - சென்னை இடையிலான பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பசுமை வழிச் சாலைக்கான அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா, திருவண்ணாமலை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலர் ரவீந்திரன் தலைமை வகித்தார்.
    திருவண்ணாமலை ரவுண்டானா பகுதியில் காவல் துறை பாதுகாப்பை மீறி அரசாணை நகல் எரிக்கப்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத போலீஸார், போராட்டக் குழுவினரை கலைக்க முயன்றனர். அப்போது, நகல் எரிக்க வந்த விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளு - முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, நகலை எரித்த 85 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
    அறிவொளிப் பூங்கா பகுதியில் விவசாயிகள் அரசாணை நகலை எரிக்காதவாறு போலீஸார் தடுத்து நிறுத்தினர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai