Enable Javscript for better performance
ரத்த சோகை விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரத்த சோகை விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    செய்யாறு அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செய்யாறு ரிவர்சிட்டி லயன் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் க.எழிலன் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் இ.மாரிமுத்து வரவேற்றார்.
    நிகழ்ச்சியில் பங்கேற்ற நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் என்.ஈஸ்வரி பேசியதாவது:
    ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ரத்த சோகை ஏற்படுகிறது. தினமும் முறையாக சரிவிகித உணவு உட்கொண்டால் ரத்த சோகை பிரச்னையிலிருந்து விடுபடலாம் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள் துரைராஜ், மணி, விஜயலட்சுமி, ராணி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தேவி, சுகாதார ஆய்வாளர் கே.சம்பத், ரிவர்சிட்டி லயன் சங்க நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai