சுடச்சுட

  

  பசுமை வழிச் சாலை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மாறி, மாறி பேசி வருவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
  சேலம் - சென்னை இடையிலான 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
  சென்னை - சேலம்  இடையிலான 8 வழிச் சாலையை போராடிப் பெற்றதாகவும், இந்தச் சாலை அமைந்தால் பொருளாதார வளர்ச்சியும், தொழில் வளர்ச்சியும் பெருகும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஒருமுறை கூறினார். சேலம் விமான நிலையத்தில் பேட்டியளிக்கும்போது, 8 வழிச் சாலை மத்திய அரசு கொண்டுவந்த திட்டம். மாநில அரசு நிலத்தை மட்டுமே ஆர்ஜிதம் செய்து கொடுக்கிறது என்றார். 8 வழிச் சாலை விவகாரத்தில் எடப்பாடி கே.பழனிசாமி மாறி, மாறி பேசுகிறார். 8 வழிச் சாலை அமைக்க அவசரம் எதற்கு? என்று விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து போராடுகின்றனர். விவசாயிகளை யாரும் தூண்டிவிடவில்லை. இந்தத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகளிடம் போலீஸார் கடுமையாக நடந்து கொள்கின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயிகளை நேரடியாகச் சந்தித்து இந்தத் திட்டம் குறித்த விளக்கியிருக்க வேண்டும்.
  8 வழிச் சாலை குறித்து கருத்துத் தெரிவிப்பவர்கள் மீது வழக்குப் பதிகின்றனர். 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்றார் டி.டி.வி. தினகரன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai