Enable Javscript for better performance
அம்மா' திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தை அடுத்த மேல்குப்பம், போளூரை அடுத்த கொரால்பாக்கம் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 49 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல்குப்பம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் மேல்குப்பம், அடிவாரம், வீரானந்தல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி 50-க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினர்.
    தொடர்ந்து, செங்கம் வட்டாட்சியர் ரேணுகா, 35 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், சிறுகுறு விவசாயிச் சான்று உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஈஸ்வரன், புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கொரால்பாக்கத்தில்...: போளூர் வட்டம், கொரால்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் மணி தலைமை வகித்து, பொதுமக்கள் அளித்த 65 மனுக்களை பெற்றார். பின்னர், 14 பேருக்கு நலத் திட்ட உதவிகளை அவர் வழங்கினார். முகாமில் மண்டல துணை வட்டாட்சியர் மஞ்சுளா, வட்ட வழங்கல் அலுவலர் (பொ) ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் தெய்வநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai