Enable Javscript for better performance
அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவ கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை ஆனி பிரம்மோத்ஸவ கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோத்ஸவ விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, ஆனி பிரம்மோத்ஸவத்துக்கான கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
    தொடர்ந்து, மேளதாளம் முழங்க ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபராசக்தியம்மன் உள்ளிட்ட உத்ஸவ சுவாமிகள் கோயில் தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர், கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 7 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரத்தில் பிரம்மோத்ஸவத்துக்கான கொடியேற்றம் நடைபெற்றது.
    விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று முழக்கமிட்டனர். விழாவில் கோயில் இணை ஆணையர் ஞானசேகர், கோயில் ஊழியர்கள், பக்தர்கள், உபயதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிரம்மோத்ஸவத்தையொட்டி, வருகிற 16-ஆம் தேதி வரை தினமும் காலை, இரவு வேளைகளில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசேகரர் மாட வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai