Enable Javscript for better performance
ஆரணியில் 251 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை : அமைச்சர் வழங்கினார்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியில் 251 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை : அமைச்சர் வழங்கினார்

    By DIN  |   Published on : 08th July 2018 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், ஆரணி நகராட்சிப் பகுதியை சேர்ந்த 251பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை வழங்கினார்.
    பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், ஆரணி நகராட்சிப் பகுதியில் 660 வீடுகள் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    இதில், ஏற்கெனவே இரண்டு கட்டமாக 280 பயனாளிகளுக்கு குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான ஆணைகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார். இதில், 70 சதவீதம் பேருக்கு மேல் வீடுகள் கட்டி முடித்துவிட்டனர்.
    இந்த நிலையில், மூன்றாவது கட்டமாக ஆரணி நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 251 பயனாளிகளுக்கு வீடு கட்டுதற்கான ஆணைகளை வழங்கும் விழா நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது:
    பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், மூன்றாவது கட்டமாக ஆரணி நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 251பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே 280 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டுவிட்டன. இந்தத் திட்டத்துக்காக ஆரணி நகராட்சி பகுதிக்கு ரூ.13 கோடியே 86 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
    வீடு கட்டுபவர்கள் 300 சதுரடிக்கு குறைவில்லாமல் கட்ட வேண்டும். வீடு கட்டுவதற்கான தொகை பயனாளிகளுக்கு 4 தவணைகளாக வங்கியின் மூலம் வழங்கப்படும் என்றார்.
    விழாவில், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், ஆரணி எம்.பி. செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, நகர, ஒன்றியச் செயலர்கள் அசோக்குமார், பிஆர்ஜி.சேகர், வேலு, நகர நிர்வாகி பாரி பி.பாபு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கோவிந்தராசன், பாசறை மாவட்டச் செயலர் கஜேந்திரன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் சேவூர் சம்பத், குடிசை மாற்று வாரிய உதவி நிர்வாக பொறியாளர் பாலமுரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai