Enable Javscript for better performance
சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலர் கே.கார்த்திகா தலைமை வகித்தார். நீதிபதிகள் ஜெய்சங்கர், மோகன்குமார், சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.எஸ்.சுகானந்தம் வரவேற்றார்.
    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான ஜி.மகிழேந்தி பேசியதாவது:
    மாவட்டத்தில் உள்ள ஆட்சியரும், முதன்மைக் கல்வி அலுவலரும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான். பள்ளி பருவத்தில் மாணவர்கள் கவனத்தை திசை திருப்பாமல் பாடங்களை கற்று வெற்றி பெற வேண்டும். வெறும் கல்வி மட்டுமே வாழ்க்கை இல்லை. பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் பண்பாட்டையும், ஒழுக்கத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அத்தகைய ஒழுக்கம் கல்லூரியிலும், வாழ்க்கையிலும் வழி நடத்திடும். போக்குவரத்து விதிகள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டில் உள்ள சட்ட விதிகளை மாணவர்கள் இளமையிலேயே கடைப்பிடிப்பதுடன், அதனை மற்றவர்களும் கடைப்பிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து, சட்ட விதிகள் தொடர்பாக மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மாவட்ட நீதிபதி மகிழேந்தி மற்றும் செய்யாறு நீதிபதிகள் ராஜ்மோகன், ஜெய்சங்கர் ஆகியோர் பதிலளித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai