Enable Javscript for better performance
செங்கத்தில் இலவச மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தில் சனிக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
    செங்கம் தங்கம் நூற்றாண்டு லயன்ஸ் சங்கம், பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் இணைந்து செங்கத்தில் இலவச ஆஸ்துமா, நுரையீரல் பரிசோதனை முகாமை நடத்தின.
    முகாமுக்கு தங்கம் லயன்ஸ் சங்கத் தலைவர் ஆசிரியர் பழநி தலைமை வகித்தார். அரவிந்தன் முன்னிலை வகித்தார். செயலர் ராஜேந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் கந்தசாமி கலந்து கொண்டு முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.
    இதைத் தொடர்ந்து, பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவன மருத்துவர்கள், 150 பேருக்கு நுரையீரல், ஆஸ்துமா பரிசோதனைகளை மேற்கொண்டு, மருந்து, மாத்திரைகளை வழங்கினர். மேலும், 44 பேருக்கு நுரையீரல் சம்பந்தமாக இலவச உயர் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்தனர்.
    இதில், செங்கம் ராமகிருஷ்ணா பள்ளிச் செயலர் ராமமூர்த்தி, கல்வி ஆய்வாளர் வெங்கடராமன், சங்கப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட சங்க உறுப்பினர்கள், மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai