Enable Javscript for better performance
செய்யாறு அருகே போலீஸ் போல நடித்து மூதாட்டியிடம் நகைகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே போலீஸ் போல நடித்து மூதாட்டியிடம் நகைகள் திருட்டு

    By DIN  |   Published on : 08th July 2018 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சனிக்கிழமை போலீஸ் எனக் கூறி, மூதாட்டியிடம் 8 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், சாத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மல்லிகா (65). இவர், செய்யாறை அடுத்த பைங்கினர் கிராமத்தில் உள்ள தனது தாயாரைப் பார்ப்பதற்காக சனிக்கிழமை காலை செய்யாறுக்கு வந்து பைங்கினர் கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    அப்போது, அந்தப் பகுதியில் நின்றிருந்த மர்ம நபர்கள் இருவர், தாங்கள் போலீஸ் என்றும், இந்தப் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதால் நகைகளை கழற்றி பையில் வைத்துக்கொள்ளுமாறும் மல்லிகாவிடம் தெரிவித்தனராம்.
    இதையடுத்து, மல்லிகா நகைகளை கழற்றி தான் வைத்திருந்த மணிபர்ஸில் வைத்து கைப்பையில் வைத்தாராம். அப்போது, செல்லிடப்பேசியையும் கைப்பையில் வைத்துக்கொள்ளுமாறு கூறிய மர்ம நபர்கள், மல்லிகாவுக்கு உதவுவதுபோல நடித்து நகைகள் இருந்த மணிபர்ஸை திருடிக்கொண்டதாகத் தெரிகிறது.
    இதையடுத்து, மல்லிகா வைத்திருந்த கைப்பையை எளிதில் திறக்காதவாறு பல மூடிச்சுகள் போட்டுக்கொடுத்து அவரை மர்ம நபர்கள் அனுப்பி வைத்தனராம். வீட்டுக்குச் சென்ற மல்லிகா, பையைத் திருந்து பார்த்தபோது, நகைகள் வைத்திருந்த மணிபர்ஸை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து செய்யாறு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai