Enable Javscript for better performance
தமிழ்நாடு பொன்விழா ஆண்டு போட்டிகள்: 30 வயதுக்கு உள்பட்டோர் பங்கேற்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு பொன்விழா ஆண்டு போட்டிகள்: 30 வயதுக்கு உள்பட்டோர் பங்கேற்கலாம்

    By DIN  |   Published on : 08th July 2018 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு பொன்விழா ஆண்டையொட்டி, திருவண்ணாமலையில் திங்கள்கிழமை (ஜூலை 9) நடைபெறும் தமிழிசை, வாய்ப்பாட்டு, பரத நாட்டியப் போட்டிகளில் பங்கேற்க 15 முதல் 30 வயதுக்கு உள்பட்டோருக்கு அரசு இசைப் பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
    தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக தமிழக அரசு கொண்டாடுகிறது. எனவே, தமிழ் மொழி, தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டுத் துறை சார்பிலான கலைப் போட்டிகள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட உள்ளன.
    இந்தப் போட்டிகள் தமிழிசை, வாய்ப்பாட்டு, பரத நாட்டியம் (பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்), நாட்டுப்புற நடனம் ஆகிய பிரிவுகளில் நடைபெறும். திருவண்ணாமலை, நெ.16, பவழக்குன்று மடாலயம் என்ற விலாசத்தில் இயங்கி வரும் அரசு இசைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டிகளில் 15 முதல் 30 வயது வரையுள்ளவர்கள் பங்கேற்கலாம்.
    மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். முதல் 3 பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவர்.
    போட்டியில் கலந்து கொள்ள வருவோர் வயதுக்கான ஆதாரம் அடங்கிய சான்றின் நகலை எடுத்து வர வேண்டும். தமிழிசை வாய்ப்பாட்டு பாட ஒவ்வொருவருக்கும் 5 நிமிடங்கள் அனுமதி வழங்கப்படும். இசையை முறையாகப் பயின்றவர்கள், இசைத்திறமை உள்ளவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளி அலுவலகத்தை 04175-223545 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai