Enable Javscript for better performance
பசுமை வழிச் சாலைத் திட்டம்: செங்கம் பகுதியில் குட்டி விமானம் மூலம் நிலம் அளவீடு- Dinamani

சுடச்சுட

    

    பசுமை வழிச் சாலைத் திட்டம்: செங்கம் பகுதியில் குட்டி விமானம் மூலம் நிலம் அளவீடு

    By DIN  |   Published on : 08th July 2018 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்காக திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் குட்டி விமானம் மூலம் நிலங்களை அளவீடு செய்யும் பணி கடந்த வியாழக்கிழமை தொடங்கி 3 நாள்களாக நடைபெற்று வருகிறது.
    சென்னை - சேலம் இடையிலான 8 வழி பசுமைச் சாலை செங்கம் வட்டத்தில் 31 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களின் வழியாக அமைக்கப்படுகிறது. இந்தச் சாலைத் திட்டப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செங்கம் வட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    எனினும், சாலைக்கான நிலங்களை அளவிடும் பணி மூன்றாம் கட்டமாக விரைந்து நடைபெற்று வருகிறது.
    முதல் கட்டமாக செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட நீப்பத்துறை முதல் சி.நம்மியந்தல் கிராமம் வரை நிலங்கள் அளவீடு செய்யப்பட்டன. இரண்டாம் கட்டமாக எல்லைக் கற்கள் நடும் பணி நடைபெற்றது.
    மூன்றாம் கட்டமாக எல்லைக் கற்கள் நடப்பட்ட பகுதியில் உள்ள விவசாய நிலம் யாருடயது, அந்த நிலம் என்ன நிலையில் இருக்கிறது, அதன் மதீப்பீடு, நிலத்தில் உள்ள பயிர், மரங்களின் மதிப்பீடு குறித்து வருவாய்த் துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை முதல் நீப்பத்துறையில் இருந்து சி.நம்மியந்தல் வரை குட்டி விமானம் மூலம் விவசாய நிலங்களை துல்லியமாக அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ஏற்கெனவே நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் பதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும், அதன் வழியாகச் செல்லும் வழித்தடங்களையும் குட்டி விமானம் மூலம் அதிகாரிகள் படம் பிடித்தனர்.
    விளை நிலங்கள், விளை நிலங்களில் உள்ள மரம், கிணறு, பயிர், கட்டடங்கள் உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடு வழங்குவதற்காகவே குட்டி விமானம் மூலம் படம் எடுக்கப்பட்டு ஆதாரம் பதிவு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    குட்டி விமானம் மூலம் நிலம் அளவீடு நடைபெறும் பகுதிகளில் அதிகாரிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai