Enable Javscript for better performance
பள்ளியில் மன்றங்கள் தொடக்க விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை ஜீவா வேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு மன்றங்களின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு பள்ளி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். இயக்குநர் பொன்.முத்து முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் எஸ்.அருள் மேகராஜன் வரவேற்றார். பள்ளி ஆலோசகர் எம்.ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
    திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் கே.ஆர்.அறிவுச்செல்வி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் கல்வியில் நாட்டம் கொள்வதுடன், மொழித் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    இதேபோல, வாழ்வியல் திறமைகளையும் கற்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது அறிவியல் மன்றம், பசுமை மன்றம், கணித மன்றம், தகவல் தொழில்நுட்ப பண்பாட்டு மன்றம், உடல் நல மன்றம் ஆகியவை தொடங்கப்படுகின்றன. இந்த மன்றங்கள் மூலம் மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பேச்சுப் போட்டி, பாடல், நடனப் போட்டிகள் நடைபெற்றன. மன்றங்களின் தலைவர்களாக பிரின்ஸ்பிரித்தம், கோபிகா, யுவராஜ், ஹரினி, பாருக், வர்ஷா, மணிகண்டன், தாட்சாயினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai