Enable Javscript for better performance
போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி ஆரஞ்ச் பிரிட்டிஷ் அகாதெமி பள்ளியில் போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சியை பள்ளி துணைத் தலைவர் அபர்ணா சிவக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார். தாளாளர் கே.சிவக்குமார், இந்த நிகழ்ச்சி எதிர் காலத்தில் நீட், ஐஐடி, சிஏ பவுண்டேஷன், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றார்.
    தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட நடிகர் தாமு, மாணவர்களிடையே போட்டித் தேர்வுகள் குறித்து உரையாற்றினார். கல்வி நிறுவன டீன் எம்.அரசப்பன், பள்ளி நிர்வாகிகள் அபூர்வாசிவக்குமார், அபிநயாசிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai