Enable Javscript for better performance
முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி ஆணை அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறையில் புதிதாக சேர்ந்துள்ள 21 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 21 பேர், திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறையில் பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கான பணியிடங்களை ஒதுக்கி மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி உத்தரவிட்டார்.
    இந்த நிலையில், 21 பேருக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி ஆகியோர் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கினர். ஆணை பெற்ற 21 பேரும் மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai