Enable Javscript for better performance
ஆரணி வேம்புலி அம்மன் கோயிலில் பந்தக்கால் நடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி, பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
    ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, வரும் 20-ஆம் தேதி விளக்குப் பூஜையும், 21-ஆம் தேதி பிரம்மாண்ட புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும், 22-ஆம் தேதி திரைப்பட இசையமைப்பாளர் சங்கர்கணேஷின் இன்னிசைக் கச்சேரியும் நடைபெற உள்ளன.
    இந்தத் திருவிழாவுக்கான பந்தக்கால் நடும் விழா அண்மையில் நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொண்டு, பந்தக்காலில் மஞ்சள், குங்குமம் வைத்து நட்டனர்.
    இதில், விழாக்குழுத் தலைவர் ஜி.வி.கஜேந்திரன், நெல் அரிசி உரிமையாளர்கள் பி.நடராஜன், நேமிராஜ், விழாக் குழுவைச் சேர்ந்த சுப்பிரமணி, ஆறுமுககவுண்டர், குணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai