தண்டராம்பட்டு வட்ட மலை கிராமங்களில் ஆட்சியர் ஆய்வு
By DIN | Published on : 09th July 2018 06:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தண்டராம்பட்டு வட்ட மலை கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
அக்கரப்பட்டி, மேல்வலசை, கீழ்வலசை, பீமாரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. பீமாரப்பட்டி கிராமத்தில் ஆய்வு செய்தபோது, அந்தப் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித் தர வேண்டும். காட்டுப் பகுதியில் மண் அள்ளியதாக வனத் துறையினர் கைது செய்த 4 பேரை விடுவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கீழ்வலசை கிராமத்தில் ஆய்வு செய்தபோது, அங்குள்ள ஆதிதிராவிடர் உண்டு, உறைவிடப் பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் மலையடிவாரத்தில் உள்ள பீமாரப்பட்டி, தானிப்பாடி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். எனவே, கீழ்வலசை பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.
மலைக் கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, கிராம மக்களின் அனைத்து கோரிக்கைகளும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது, தண்டராம்பட்டு வட்டாட்சியர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகாதேவன், பரிமேலழகன், உதவிச் செயற்பொறியாளர் சவுந்தர்ராஜன், வருவாய்
ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.