Enable Javscript for better performance
திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மைப் பணி- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை தூய்மை அருணை திட்டம் சார்பில், நகராட்சிக்கு உள்பட்ட 39 வார்டுகளிலும் ஞாயிற்றுக்கிழமை திட்டத்தின் அமைப்பாளர் எ.வ.வேலு எம்எல்ஏ தலைமையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    திருவண்ணாமலை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணி மேற்கொள்ள  தூய்மை அருணை திட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் பணியை செய்ய 39 ஒருங்கிணைப்பாளர்கள், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் மாட வீதியில் தினமும் நடைபெறும் தூய்மைப் பணிக்கு 7 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நகரின் 39 வார்டுகளிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நகரின் 39 வார்டுகளிலும் தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டன. தூய்மை அருணை திட்டத்தின் அமைப்பாளரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு தூய்மைப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அவரும் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
    தூய்மைப் பணியில் தூய்மை அருணை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஸ்ரீதரன், மு.பெ.கிரி, ப.கார்த்திவேல்மாறன், சி.என்.அண்ணாதுரை, மருத்துவர் எ.வ.வே.கம்பன், இர.செல்வராஜ், குட்டி க.புகழேந்தி, ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட 35 ஒருங்கிணைப்பாளர்கள், தூய்மைக் காவலர்கள் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai