மானிய விலையில் நெல் விதைகள்: விவசாயிகளுக்கு அழைப்பு
By DIN | Published on : 09th July 2018 06:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மானிய விலையில் நெல் விதைகள், நுண்ணூட்டக்கலவை பெற்று பயனடைய அனக்காவூர் வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், விவசாயிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகிய ஐ.ஆர்.50, ஆடுதுரை 37 ரக விதைகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.10 மானியமும், 10 ஆண்டுகளுக்கு உள்பட்ட கோ.51 ரக விதைகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.20 மானியமும் வழங்கப்படுகிறது. நுண்ணூட்டக்கலவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
மேலும், வேளாண்மை பண்ணைக் கருவிகள் பெற உழவன் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்து, முன்னுரிமை அடிப்படையில் பண்ணைக் கருவிகளைப் பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.