Enable Javscript for better performance
ஊரக வளர்ச்சித் துறையினர் மறியல்: 297 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    26 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 297 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     ஊராட்சிச்  செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். விடுமுறை நாள்களில் களப்பணி ஆய்வு செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதனால், மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் எவ்வித பணிகளும் நடைபெறாமலும், ஊழியர்கள் இல்லாமலும் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 
    இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை சிறை நிரப்பும் போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
    அதன்படி, திருவண்ணாமலை, அண்ணா சிலை எதிரே ஏராளமான ஊழியர்கள் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 
    போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.பாஸ்கரன் தலைமை வகித்தார். 
     மாவட்ட துணைத் தலைவர் ஜி.அண்ணாமலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.வி.மகாதேவன், சஞ்சீவிகுமார், அ.கருணாகரன், பரிமேலழகன், பி.பி.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    ஊரக வளர்ச்சித் துறையினரின் மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள், ஏராளமான வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 297 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai