Enable Javscript for better performance
குறைதீர் கூட்டத்தில் 657 மனுக்கள்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில்  பொதுமக்களிடமிருந்து 657 மனுக்கள் பெறப்பட்டது.
    மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, முதியோர், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 657 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
    இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
    நலத் திட்ட உதவிகள்: குறைதீர் கூட்டத்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பிலான எழுத்துக்களை பெரிதாகக் காட்டும் கருவி, ஒருவருக்கு ரூ.5,400 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலி, ஒருவருக்கு ரூ.840 மதிப்பிலான காதொலிக் கருவி, ஒருவருக்கு ரூ.602 மதிப்பிலான ஊன்றுகோல், 8 பேருக்கு அனைத்து வகை திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்துக்கான காசோலைகள் உள்பட மொத்தம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 842 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
    இதுதவிர, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செங்கம் வட்டம், புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரியா என்பவருக்கு ஆதரவற்ற விதவை உதவித்தொகை மாதம் ரூ.1000 வழங்குவதற்கான அரசாணை, தேசிய நெடுஞ்சாலை 179-பி திட்டத்தின் கீழ் பணிபுரிய கணினி இயக்குபவர் 
    3 பேருக்கு பணி நியமன ஆணைகள், போளூர் வட்டம், அலியபாத் கிராமத்தைச் சேர்ந்த மலருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குநர் ப.ஜெயசுதா, கலால் உதவி ஆணையர் எம்.எஸ்.தண்டாயுதபாணி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai