தொழில்நெறி வழிகாட்டுதல் விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published on : 10th July 2018 08:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலையில் நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டுதல், திறன் பயிற்சி விழிப்புணர்வுப் பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஜூலை 9 முதல் 13-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளில் தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் தொடக்கமாக, தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தொடக்கிவைத்தார். திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பெரியார் சிலை வழியாகச் சென்று நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் முடிவடைந்தது.
பேரணியில் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி, டேனிஸ் மிஷன் மேல்நிலைப்பள்ளி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றின் மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
பேரணியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) த.மோகன்ராஜ் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.