Enable Javscript for better performance
பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: 150 பேர் ஆட்சேபனை மனு- Dinamani

சுடச்சுட

    

    பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: 150 பேர் ஆட்சேபனை மனு

    By DIN  |   Published on : 10th July 2018 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து, 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை ஆட்சேபனை மனு அளித்தனர்.
    சேலம்-சென்னை இடையிலான பசுமைச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க, தங்களது நிலத்தை பசுமைச்சாலை அமைக்க தரமாட்டோம் என்றும், தங்களது நிலங்களில் அளவீடு செய்யும் பணியில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும், விவசாயிகள் பலர் திருவண்ணாமலையில் உள்ள பசுமைச் சாலைத் திட்ட தனி அலுவலகத்தில் மனு கொடுத்து வருகின்றனர்.
    150-க்கும் மேற்பட்டோர் மனு: இந்த நிலையில், திங்கள்கிழமை திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருவண்ணாமலை, செல்வா நகரில் உள்ள பசுமைச் சாலைத் திட்ட நில எடுப்பு தனி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து பசுமைச் சாலைத் திட்டத்துக்கு தங்களது நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று கூறி ஆட்சேபனை மனுக்களை அளித்தனர்.
    மனுக்களை இதற்கான சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர்கள் பெற்றுக் கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai