Enable Javscript for better performance
மதுக் கடைக்கு எதிரான போராட்டம் வாபஸ்- Dinamani

சுடச்சுட

    

    போளூர் அருகே மதுக் கடையை அகற்றக் கோரி, கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
    போளூர் அருகே சோத்துகன்னி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தக் கிராம மாணவ, மாணவிகள் மற்றும்  அருகேயுள்ள விளாப்பாக்கம் கிராமத்தில் உள்ளவர்களும் போளூர், சாணாரப்பாளையம், சேத்துப்பட்டு, மண்டகொளத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.
    இந்த நிலையில், சோத்துக்கன்னி கிராமத்திற்கு செல்லும் வழியில் ஊருக்கு முன் பகுதிலேயே கடந்த  2-ஆம் தேதி புதிதாக அரசின் மதுக் கடை திறக்கப்பட்டது.
    இந்தக் கடையைத் தாண்டித்தான் மாணவ, மாணவிகள் செல்லவேண்டும். இங்கு மது அருந்துவோரால் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு தொல்லை ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, சோத்துக்கன்னி, விளாப்பாக்கம் பொதுமக்கள் மற்றும் பாமகவினர் இணைந்து டாஸ்மாக் கடையை மூடக்கோரி,  திங்கள்கிழமை கடைமுன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
     இதை அறிந்த போளூர் போலீஸார், சோத்துகன்னி, விளாப்பாக்கம் இளைஞர்கள் முருகன், ரவிக்குமார், சுரேஷ் என 5 பேர் மற்றும் பாமக நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். 
    போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட டாஸ்மாக்  மேலாளர் புஷ்பலதா, வட்டாட்சியர் தியாகராஜன், டிஎஸ்பி சின்னராஜ்  ஆகியோர் கலந்து கொண்டனர்.  பேச்சுவார்த்தையில்  டாஸ்மாக் கடையை   15 நாள்களுக்குள் வேறு இடத்துக்கு மாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. மேலும், மதுக் கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 5 பேரை போளூர் போலீஸார்  பிடித்து வைத்துள்ளனர். இதனால் சோத்துக்கன்னி, விளாப்பாக்கம் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai