Enable Javscript for better performance
முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 10th July 2018 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட 
    நிர்வாகம் தெரிவித்தது.
    திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படை வீரர்கள், அவர்களைச் சார்ந்தோரின் பிள்ளைகளுக்கு கல்வி  உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங் கப்படுகின்றன. அதன்படி, 2018-19ஆம் கல்வியாண்டில்  1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலம்  விண்ணப்பிக்கலாம்.
    கலை, அறிவியல், தொழில் சார்ந்த பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்பு (இளங்கலை, முதுகலை) பயிலும் மாணவ, மாணவிகள் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகிப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தெரிவித்தார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai