Enable Javscript for better performance
விஜயகாந்த் குணமடைய வேண்டி பால்குட ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் 108 பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
    ஊர்வலத்துக்கு, தேமுதிக தெற்கு மாவட்டச் செயலாளர் வி.எம்.நேரு தலைமை வகித்தார். கட்சியின் விசாரணைக் குழு உறுப்பினர் வி.எஸ்.மணிகண்டன், மாவட்ட அவைத் தலைவர் ஸ்ரீகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருணாசலேஸ்வரர் கோயில் கம்பத்திளையனார் சன்னதியில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம், மாட வீதியை வலம் வந்து மீண்டும் கோயிலை அடைந்தது.
    இதையடுத்து, அருணாசலேஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
     தொடர்ந்து, 1,008 தேங்காய்களை உடைத்தும், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கியும் தேமுதிகவினர் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai