Enable Javscript for better performance
5 மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு நாளை முதல் நிர்வாகப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    5 மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு நாளை முதல் நிர்வாகப் பயிற்சி

    By DIN  |   Published on : 10th July 2018 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் 5 மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 11) நிர்வாகப் பயிற்சி தொடங்குகிறது.
    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில் சேலம், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனர்.
    பயிற்சி முகாமை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கி வைத்துப் பேசுகிறார். 
    இதில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai