Enable Javscript for better performance
ஊரக வளர்ச்சித் துறையினர் தொடர் வேலைநிறுத்தம்: கிராம மக்கள் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஊரக வளர்ச்சித் துறையினர் தொடர் வேலைநிறுத்தம்: கிராம மக்கள் பாதிப்பு

    By DIN  |   Published on : 11th July 2018 07:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊரக வளர்ச்சித் துறையினரின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக செங்கம், போளூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிராம  மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    ஊராட்சிச் செயலர்களுக்கு பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 3-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் 8-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது.
    இதையொட்டி, செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அலுவலர்கள் யாரும் பணிக்கு வராததால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதனால், செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 44 கிராம ஊராட்சிகளிலும் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், பசுமை வீடுகள், கிராமப்புற சாலைப் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டப் பணிகள் தடைபடுவதுடன், பல்வேறு  பணிகளுக்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வரும் பயனாளிகள் அலுவலர்கள் இல்லாததால் ஏமாற்றத்ததுடன் திரும்பிச் செல்கின்றனர்.
    மேலும், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால் தாங்கள் வீண் அலைச்சலுக்கு உள்ளாவதுடன், பணமும் விரயமாவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். எனவே, ஊரக வளர்ச்சித் துறையினரின் போராட்டத்தை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    போளூரில்...: இதேபோல, போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் 40 அலுவலர்களும் கடந்த 3-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், போளூர் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளிலும் அரசு திட்டப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai