கம்பன் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
By DIN | Published on : 11th July 2018 07:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை கம்பன் தமிழ்ச் சங்கம், திருவண்ணாமலை நந்தினி பதிப்பகம் இணைந்து 3 நூல்கள் வெளியீட்டு விழா, சாதனை மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவை நடத்தின.
திருவண்ணாமலை, கணேஷ் பன்னாட்டு அரங்கில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற இந்த விழாவுக்கு நல்லாசிரியரும், புலவருமான ஆ.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட தமிழ் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன், வர்த்தக சங்கத் தலைவர் மு.மண்ணுலிங்கம், சக்தி பாலிடெக்னிக் கல்லூரித் தலைவர் செ.வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்பன் தமிழ் சங்கச் செயலரும், எழுத்தாளருமான ந.சண்முகம் வரவேற்றார்.
3 நூல்கள் வெளியீடு: விழாவில், சா.லூர்துநாதன் எழுதிய வாழ்வியல் ஒளி என்ற நூலை உலக சான்றோர் சங்கத் தலைவர் மாம்பலம் ஆ.சந்திரசேகர் வெளியிட, செங்கன் மாமுருகு, அ.வாசுதேவன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் ந.சண்முகம் எழுதிய சாதனை நாயகர் தமிழரிமா தா.சம்பத் என்ற நூலை புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி வி.முத்து வெளியிட, ஆசுகவி பெ.ஆராவமுதன், பேராசிரியர் கு.வணங்காமுடி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மேலும், எஸ்.தணிகைவேல் எழுதிய முகநூல் வைரங்கள் என்ற நூலை முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.விஜயகுமார் வெளியிட, ஓவிய ஆசிரியர் சோ.ஏ.நாகராஜன், டி.வி.எம்.நேரு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
கவியரங்கம்: தொடர்ந்து, கவிஞர் வயலூர் மு.பிரசன்னா தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற தலைப்பில் கவிரயங்கம் நடைபெற்றது. இதில், கவிஞர்கள் கி.தங்கதுரை, சாவல்பூண்டி ஞானப்பிரகாசம், பா.தங்கராசு, பேராசிரியர் விமல்ராஜ், சு.தமிழ்மதி, கவிதாயினி தேவிகாராணி ஆகியோர் கவி பாடினர்.
பல்வேறு சாதனைகள் படைத்த பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளும், பல்வேறு சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, செல்வி ப.நந்தினியின் பரதநாட்டியம் நடைபெற்றது.